Nov 26, 2012

இதுவரை இழந்தவை...


இருந்தும்  இல்லாமலேயே  போய்விட்ட
என் அப்பா 
இறுதிவரை என நினைத்து இடையில் போன
(சில) நண்பர்கள்.
வார்த்தைகளில் சொல்லிவிட  முடியாத  என்
முதற்காதல் 
இருப்பதில் அர்த்தமில்லை என ஒதுக்கிய
சொந்தங்கள்
கை மேல் இருந்து கைநழுவிப்போன
கணிதம்
கனவாய் இருந்து கனவாகவே கலைந்த
பல்கலை.
இளமையின் வேகத்தில் இழந்த கொஞ்சம் (அல்ல நிறையவே)
ரத்தம்.
வைத்திருந்து பிரயோஜனமில்லை  என வழியில் விட்ட
குழந்தை மனம்.
காலம் தன்னுடன் கொண்டுபோய்விட்ட
சில  முகங்கள்.  
பைத்தியமாய் திரிந்து, நடை பிணமாய் வாழ்ந்த
நாட்கள்
கடந்த  நினைவுகளில் இன்றும் தொலையும்
நிமிடங்கள்
எப்போது   இழந்தோம் எனத் தெரியாமலே போய்விட்ட
பாதி இளமை 
ஏதோ காரணத்தால் ஏதோவொரு திருப்பத்தில் தொலைத்துவிட்ட
'நான்'
ஹம்ம்..  வாழ்வின் நினைவுகளில் நீந்தி நிகழ்  திரும்பும்போது,
எங்கோ இருந்து, ஏக்கத்துடன் 
கனத்து வரும் பெருமூச்சில்,...
இன்னும் எத்தனை எத்தனையோ..!



Jan 30, 2012

தத்து பித்துவம்

  • எந்த ஒரு நிரந்தரமான பிரச்சினைக்கும் தற்காலிக தீர்வைத்  தேடாதீர்கள். ஆனால் தற்காலிக பிரச்சினை ஒன்றிற்கு   நிரந்தரமான  தீர்வை தேடுங்கள்.

தத்து பித்துவம்

  • எந்த பிரச்சினைக்குமான  தீர்வும் அந்த பிரச்சினையில் தான் உள்ளது. அல்லது அதே நேரம் எங்களுக்கு உள்ள வேறொரு பிரச்சினையில் உள்ளது.

Aug 21, 2011

வாழ்க்கை

எண்ணங்களின் வண்ணங்களோடு
உடையும் வரை அலையுமொரு
நீர்க்குமிழி

Aug 18, 2011

BRRRRRRRR


             


கோக் உலகமே Cooool  உலகமாய்
இப்போ மாறுதே....
ஐஸ் கோக் சுவை உள் நுழைந்தெமை
BRRRRRR ஆக்குதே...     

கொகா  கோலா இருந்தாலே 
இன்பம்ம்ம் பரவும் தன்னாலே..
குளிர் பரவசம் எம்மிடமே 
BRRRRRR  தான்...    BRRRRRR  தான்...
இனி வாழ்வே...

கோக் தொட்டதும் இதழ் பட்டதும்
இதயம் கரையுதே
எம் தேகங்கள் BRRRRRR ஆகித்தான்
குளிரில் உறையுதே ...
  
கொகா  கோலா இருந்தாலே 
இன்பம் பரவும் தன்னாலே..
குளிர் பரவசம் எம்மிடமே 
BRRRRRR  தான்...   BRRRRRR  தான்...
இனி வாழ்வே...
                                         
விளம்பரக் காணொளி -
http://www.youtube.com/user/PhoenixOgilvy?blend=2&ob=5#p/u/1/Di-0DPNsWcA

;                                     


Aug 17, 2011




வண்ணப்பூச்சி
வந்தமர்வதை போன்ற 
உன் வருகை 
நிகழத்தான் வேண்டும்,
இனியும் இந்தக்  கவிதைகளால் 
என்னைக் காப்பாற்ற
முடியுமென்று 
தோன்றவில்லை...




Jul 20, 2011


மொட்டு உயிர்க்கையில்
மரணிக்கிறது
பனித்துளி..